September 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில்: மரத்தில் கார் மோதி போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயம் 

1 min read

Sankarankovil: 5 people, including a police officer, injured after car hits tree

4/9/2026

தென்காசி மாவட்டம், தரன் கோவில் அருகே அதிகாலையில் குற்றாலத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மோதியது இதில் காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.

சங்கரன்கோவில் காந்தி நகர் 4-ம் சேர்ந்தவர் துரை மகன் பவுல் (வயது 23). சங்கரன்கோவில் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் சதீஷ் (வயது 20) காயிதே மில்லத் 1-ம் தெருவை சேர்ந்தவர் ஷேக் பரீத் மகன் முகமது ஷெரீப் (வயது 19) காந்தி நகர்  4-ம் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 25) திருநெல்வேலி பாலாமடையை சேர்ந்த கணபதி மகன் முத்துமாலை வயது (வயது 30). முத்து மாலை சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

 முத்து மாலை, பவுல், சதீஷ், முகமது ஷெரீப், கார்த்திக் ஆகிய ஐந்து பேரும் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று அதிகாலை சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை பவுல் ஓட்டி வந்தார்.  கார் நேற்று அதிகாலை வடக்குப்புதூர் அருகே வரும்போது கட்டுப்பாடின்றி புளிய மரத்தில் மோதியது. 

 இதில் காயமடைந்த பவுல், சதீஷ், முகமது ஷெரீப், கார்த்திக் ஆகிய நான்கு பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சங்கரன் கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் காயமடைந்த போலீஸ்காரர் முத்துமாலை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *