கடையம் அருகே மிளா மீது பைக் மோதியதில்-3 பேர் படுகாயம்
1 min read
Three people seriously injured after a motorcycle collided with a sambar deer near Kadayam
4.9.2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் மிளா குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் தூக்கி வீசப்பட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன்பின் காயமடைந்த மூன்று பேர்களும் 108 வாகனங்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகில் ராஜாங்கபுரம் கிராமத்தில் இரவில் ஊருக்குள் வந்த மிளா மீது இருசக்கர வாகனம் மோதியதில் கோவிந்தபேரி யை சேர்ந்த சுடலைமுத்து அவரது மகள் மற்றும் கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் தூக்கி வீசப்பட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி என்பதால் இக்கிராமங்களில் இரவு நேரங்களில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சிறுகிழங்கு உள்ளிட்ட பயிர்களை கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நீண்ட காலமாக நாசம் செய்து வருகின்றன. இது நீண்ட காலமாக இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இதற்காக வனத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் இம்மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலும் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் உயிர் பயத்திலும் இக்கிராம மக்கள் உள்ளனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.