பொட்டல்புதூரில் தலைத் துண்டித்து வாலிபர் கொலை
1 min read
Youth beheaded and murdered in Pottalputhur
5.9.2026
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில்
இரவு 9.30 மணி அளவில் நின்று கொண்டிருந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தலை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பொட்டல்புதூர் அருகே உள்ள பசும்பொன் நகர் பகுதியைச் சார்ந்த லட்சுமணன் என்பவரது மகன் சந்தானம் (வயது 28) இவர் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் பொட்டல்புதூர் கார் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்தானத்தின் கழுத்தில் பலமாக வெட்டியதில் தலை துண்டானது. ரத்தவெள்ளத்தில் சாய்ந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அசோக்குமார் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி
கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், கலா, சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
உடனடியாக சந்தானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சந்தானத்தை வெட்டிக்கொலை செய்த நபர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த வாகனத்தின் உரிமையாளர் யார்? அவர்தான் இந்த கொலையை செய்தாரா? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது