பாட்டாக்குறிச்சியில் மாவட்ட அளவில் யோகாசன விளையாட்டு போட்டி
1 min read
District-level Yoga sports competition in Pattakkurichi
8.9.2926
தென்காசி மாவட்ட அளவிலான யோகாசன விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாட்டாகுறிச்சியில் வைத்து நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியினை தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பாக இந்த போட்டியானது நடைபெற்றது இந்த யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக ஒரு பிரிவுக்கு 6 பரிசுகள் விகிதம் ஆண்களுக்கு 3 பரிசுகளும் பெண்களுக்கு 3 பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் பிரிகேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் தென்காசி மாவட்ட யோகாசன விளையாட்டு சங்கத்தின் தலைவர் லெட்சுமணன்,
துணை தலைவர் சங்கீதா, செயலாளர் ஜெ. ஜெயச்சந்திரன், பொருளாளர் மு. தமீம் அன்சாரி, துணை செயலாளர் – அரவிந்த் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இப்போட்டியினை சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.