September 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இரட்டைகுளம் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்; மறியல்

1 min read

Tractor driver attacked in Irattaikulam; road blockade staged

8/9/2026
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளஇரட்டைகுளம் பகுதியில் டிராக்டர் டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைகுளம் அருகே டிராக்டர் டிரைவர் முத்துக்குட்டி என்பவரை பலர் தாக்கியதால் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஊர் பொது மக்கள் ஒன்று கூடி சுரண்டை to சங்கரன்கோவில் ரோட்டில் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்த சுரண்டை காவல்துறை ஆய்வாளர் மதன்குமார். பேச்சுவார்த்தை க்கு பின்பு இரட்டைகுளம் தேவர் மஹால் முன்பாக திறண்ட ஊர் பொது மக்கள், மீண்டும் சுரண்டை காவல் துறை இரண்டு பேர் கைதாகி உள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வோம் என பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த ரன். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *