September 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீள் மையம்

1 min read

Rehabilitation Center for the Mentally Ill in Tenkasi

9.9.2026

தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசரகால சிகிச்சை மற்றும் மீள் மையத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.

ஆதறவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் சமுதாயத்தில் இணைத்து வைக்கும் பொருட்டு தேசிய சுகாதார இயக்கம்- தமிழ்நாடு வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட இனண இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமருத்துவமனையில்  அவசர கால சிகிச்சை மற்றும் மீள் மையம் 08-09-2026 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களான பேனியன் ,  அமர் சேவா சங்கத்தின்  பங்களிப்புடன் செயல்பட உள்ள இம்மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவளிக்க குடும்பத்தினர் இன்றி, சுற்றி திரிபவர்களை காவல்துறை ஒத்துழைப்புடன் மீட்டு முதலுதவி, பராமரிப்பு, மருத்துவ , மனநல சிகிச்சை மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுடன் இணைக்கும் சிறப்பான நோக்கத்துடன் இம்மையம் செயல்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் *தென்காசி மாவட்ட இனண இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா , தென்காசி  மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வபாலா , மாவட்ட மனநல மருத்துவர் நிர்மல, மனநல மருத்துவர் முகமது இப்ராஹிம், பேனியன் துணை இயக்குநர் கீர்த்தனா, அமர் சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் நவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

One attachment  •  Scanned by GmailAdd to Drive

Preview attachment IMG-20260908-WA0071.jpgPreview attachment IMG-20260908-WA0071.jpg

IMG-20260908-WA0071.jpg

Download

Add to Drive

Edit with

Save to Photos

ReplyReply allForward

Add reaction

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *