தென்காசி: மக்கும்- மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து போடாவிட்டால் நடவடிக்கை
1 min read
Tenkasi: Action to be taken if biodegradable and non-biodegradable waste are not segregated.
13/9/2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதி பொது மக்கள் தங்கள் வீடுகள், மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்னவென்றால்
கீழப்பாவூர் பேரரூராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியை மேம்படுத்தும் நோக்கில் பேரூராட்சி நிர்வாகம் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகள், மற்றும் வணிக நிறுவனங்ககளில் உள்ள குப்பைகளை நாள்தோறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று இரண்டு பிரிவுகளாகத் தரம் பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும் ஆபத்தான மருத்துவ கழிவுகள், பயன்படுத்கப்பட்ட பேட்டரிகள், டியூப் லைட்டுகள், மின்னணுக் கழிவுகள், நாப்கின்கள் மற்றும் முகக் கவசங்கள் போன்றவற்றை சாதாராணக் குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வழங்க வேண்டும்.
வருகிற 1- ஆம் தேதி முதல் குப்பைகளைப் முறையாகத் தரம் பிரித்து வழங்கத் தவறும் பட்சத்தில், உங்கள் வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது .
கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்தத் தூய்மைப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் குற்றாலம் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கும் ஜா.மாணிக்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்
“வருகிற 1- ஆம் தேதி முதல் குப்பைகளைப் முறையாகத் தரம் பிரித்து வழங்கத் தவறும் பட்சத்தில், வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது .
குற்றாலம் பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்தத் தூய்மைப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் ஆபத்தான மருத்துவ கழிவுகள், பயன்படுத்கப்பட்ட பேட்டரிகள், டியூப் லைட்டுகள், மின்னணுக் கழிவுகள், நாப்கின்கள் மற்றும் முகக் கவசங்கள் போன்றவற்றை சாதாராணக் குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வழங்க வேண்டும்.
வருகிற 1- ஆம் தேதி முதல் குப்பைகளைப் முறையாகத் தரம் பிரித்து வழங்கத் தவறும் பட்சத்தில், உங்கள் வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது .
விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.