வடக்கு காவலாக்குறிச்சியில் புதிய கலையரங்கம்
1 min read
New Open-Air Auditorium in Vadakku Kavalakurichi
13.9.2026
தென்காசி தொகுதி, வடக்கு காவலாக்குறிச்சியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தினை தென்காசி எம்.எல்.ஏ. டாக்டர் கலைகதிரவன் திறந்து வைத்தார்.
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு காவலாக்குறிச்சியில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் தி;வ்யா மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தென்காசி எம்.எல்.ஏ. டாக்டர் கலைகதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வாழ்த்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சபரி கார்த்திக், ஊராட்சி மன்றத் தலைவர்கள் முத்தம்மாள்புரம் ஆர்.பி முருகன், கல்லூரணி ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் முத்துக்குமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணபதி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் கிளைக் கழகச் செயலாளர் அய்யாசாமி ஜெயக்குமார், காவலாக்குறிச்சி அந்தோணி, மாவட்ட விவசாய சங்க தலைவர் மாடசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக், ஹரி கிருஷ்ணன், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், முன்னாள் கடங்கநேரி ஊராட்சி தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.