September 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்தது- 30 பேர் படுகாயம்.

1 min read

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; sv:16.1.14.4.W30; module: photo;hw-remosaic: false;touch: (0.47777778, 0.627063);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Government bus overturns into river near Tenkasi; 30 people critically injured.

13.9.2026
தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் அழுதகண்ணி ஆற்றுக்குள் பாய்ந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுனர் உட்பட 30 பயணிகள் பலத்த காயம் – கிராம மக்கள், தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் பேரூந்துக்குள் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை 7 மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தை ஒட்டுனர் சிவசக்தி ஒட்டிச் சென்றார். நடத்துனர் இசக்கிமுத்து பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

தென்காசியில் முக்கிய நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் மூன்று கிலோமீட்டர் சென்ற நிலையில் வேட்டைக்காரன் குளம் கிராமத்தை அடுத்த அழுதகன்னி ஆற்று பாலம் அருகே அரசு பேருந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

பேருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வேட்டைக்காரன்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் உடனடியாக தீயனைப்புத்துறை, காவல்துறை, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்ததுடன் பேரூந்துக்குள் சிக்கி தவித்தவர்களை பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தென்காசி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேரூந்தின் அடிப் பகுதியில் சிக்கி தவித்தவரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் ஜெசிபி இயந்திரம் மூலம் பத்திரமாக வெளியே மீட்டனர்.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சிவசக்தி மற்றும் நடத்துனர் இசக்கிமுத்து உள்ளிட்ட 30 பயணிகளுக்கும் தலை கை கால்கள், என பலத்தகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து நடந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *