கடையநல்லூரில் இடி தாக்கி கட்டிட தொழிலாளி பலி
1 min read
Construction worker killed by lightning in Kadayanallur.
15.9.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையின் போது இடி தாக்கியதில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி தியாகராஜ நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காசி ராஜ் (வயது 42) கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தற்போது இவர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை சாலையில் உள்ள ரஹ்மத்துல்லா என்பவருக்கு சொந்தமான வீட்டில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அப்பொழுது திடீரென கடையநல்லூரில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது அப்பொழுது கொத்தனார் காசிராஜ் இரண்டாவது மாடியில் கட்டுமானச் சாரத்திலிருந்து வேலை செய்து கொண்டிருந்த காசிராஜ் மீது இடிதாக்கியது இதில் கீழே விழுந்துவிட்டார்.
உடனடியாக அருகில் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்ததாக குறிப்பிட்டனர்.
இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இடி தாக்கி உயரிழந்த காசிராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.