கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
1 min read
Four members of the same family killed in a fridge explosion in Karnataka.
15/9/2026
கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களால் தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின் கசிவு (Short Circuit) காரணமாக மின் அழுத்தம் அதிகமாகி, வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.