பாகிஸ்தான்: இம்ரான்கானின் சகோதரி கைது
1 min read
Former Pakistan Prime Minister Imran Khan’s sister arrested.
21/9/2026
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில், அவரது சகோதரி அலீமா கான் லாகூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இம்ரான்கானை விடுவிக்க வலியுறுத்தி அலீமா கான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.. வருகிற 27-ந்தேதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) இதுதொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அவர் கைதாகி இருக்கிறார்.
பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில், பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத் தின் கீழ் அவரை 30 நாட்கள் காவலில் வைக்க லாகூர் துணை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார். அவர் கோட் லக்பத் சிறைக்கு மாற்றப்பட்டதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.