September 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

1 min read

Kerala landslide death toll rises to 7.

21.9.2026
கேரளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் கோட்டயம், மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சின்னம்மாள் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும், சென்னையைச் சேர்ந்த சங்கீதா என்பவர் கேரள மாநிலம் வாகமன் பகுதிக்கு குழுவினருடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளம்பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மலப்புரம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 இளைஞர்களில் 4 பேரை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 3 பேரின் உடல்கள் நேற்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான யாசிம், கருவாரக்குண்டு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ரகிம், வண்டூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சஜாப் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதான ராபின் என தெரியவந்துள்ளது. மேலும், ஆற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்த 41 வயதான சாஹிதாவையும் வெள்ளம் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *