தென்காசியில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
1 min read
Sivanthi Adithanar’s Birth Anniversary Celebration in Tenkasi
24.9.2026
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்ட பத்மஸ்ரீ பா .சிவந்தி ஆதித்தனாரின் 91 வது பிறந்தநாள் விழா இன்று தென்காசியில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவிலில் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் பூஜைகளும் இங்கு வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்புகளும் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. முன்னதாக அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது
தென்காசி காசி விசுவநாதர் திருக்கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றார்கள். பக்தர்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரம் வைக்க வேண்டும் என்றும், தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வில்
கொட்டா குளம் கணேசன், ஜான் டேவிட், சுப்பிரமணியன், குரு சாமி, தங்கராஜ், ராமேஸ்வரன், மயில்ராஜ், குமார், முருகன், சி.கணேசன், முருகையா, மாயகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.