October 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பொதுமக்கள் யூனியன் அலுவலகம் முன்பு திரண்டனர்

1 min read

The public of Avudaiyanur gathered in front of the Union office

6/10/2026
தென்காசி மாவட்டம்,
ஆவுடையானூர் ஊராட்சியில் தன்னார்வலர் மூலம் சாலை அமைக்க அனுமதிக்க கோரி யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சியை சேர்ந்த அருந்ததியர்புரம் பகுதியில் 3 தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் முறையான சாலை வசதி செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை அந்த பணியை செய்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் அங்குள்ள மேலத்தெரு, தெற்கு தெரு, கீழத்தெரு ஆகிய தெருக்களில் தனது சொந்த நிதியில் இருந்து ஆவுடையானூரை சேர்ந்த தன்னார்வலரான மருத்துவர் ஒருவர் சாலை அமைத்து தர முன்வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து மேற்படி சாலை அமைக்க ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் தன்னார்வலர் மூலம் சாலை அமைக்க அனுமதியளிக்கக்கூடாது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரையை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களின் கோரிக்கையை ஏற்று தன்னார்வலரான மருத்துவர் மூலம் சாலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், யூனியன் பொது நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.6 லட்சம் நிதி அனைத்து சாலைகளும் அமைக்க போதுமானதாக இருக்காது. எனவே அந்த நிதியை எங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தை பழுது பார்த்து, கழிப்பறை வசதி செய்து தர பயன்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *