October 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஞானேஷ்குமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

1 min read

Z-plus security for Gnanesh Kumar

8.10.2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளன.

இதன்படி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய பேரணியின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கைதான இவர்கள், இரவு 10 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை இன்று நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தில், முழு அளவிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பதை உறுதி செய்ய அந்தந்த கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, எஸ்.ஐ.ஆர். நடைமுறை மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக புகார் மனு அளிக்க இந்தியா கூட்டணி நேரம் கேட்டிருந்தது.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 15 தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை சந்திக்கும் பிரதிநிதிகள் குழுவில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜனாதிபதியை சந்திக்கும் நேரம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்.ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடரும் நிலையில்

தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி, ஆக்ராவில் ஞானேஷ்குமார் இல்லம் முன் போராட்டங்கள் நடந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *