October 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சாட்-ஜிபிடி மூலம் பயின்று அரசு தேர்வில் 5வது இடத்தை பிடித்த மாணவி

1 min read

Student secures 5th place in government exam after studying using ChatGPT.

10.10.2026
அரியானா டோக்ரான் மொஹல்லா பகுதியை சேர்ந்த 23 வயதான சவி சர்தானா, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் மாணவி பி.ஏ.எல்.எல்.பி பயின்றார்.

இவர் ஆரம்பத்தில் வழக்கறிஞராக விரும்பினாலும், அவருக்கு குடிமை பணியில் சேர வேண்டும் என்ற விருப்பம் நாளடைவில் வந்துள்ளது.

இவரின் தந்தை சிறிய அளவில் ஒரு அச்சகத்தை நடத்தி வந்துள்ளார், இதையடுத்து தனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக வீட்டில் இருந்தபடியே அரசு தேர்விற்கு மாணவி படித்து வந்துள்ளார்.

இதன் காரணமாக தனது கல்லூரி படிப்பின் போதே, குடிமைப் பணி தேர்வுகளுக்காக மாணவி தயாராகி வந்தார்.

மேலும் இவர் தனது அன்றாட படிப்பை சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு மூலம் கற்று வந்துள்ளார்.

மாணவி தனது கற்றல் முறையை குறித்து கூறுகையில், தான் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், முழுவதுமாக படிப்பில் கவனம் செலுத்தி வந்ததாக கூறினார்.

இதையடுத்து 2025 ஏப்ரலில் நடைபெற்ற அரியானா குடிமை பணி தேர்வில் சுமார் 60,000 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். இந்த முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, நேர்கானலுக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து நேர்காணல் முடிந்து வெளியான தேர்வு முடிவில், 675 மதிப்பெண்களுக்கு 385.80 புள்ளிகள் பெற்றி மாநிலத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து மாணவி கூறுகையில், “எனது குடும்பத்தில் அரசு அதிகாரி வேலையை பெற்ற முதல் நபர் நான் தான். நான் ஒரு நாளைக்கு சுமார் எட்டு மணி நேரம் தேர்வுக்கு தயாராவதற்காக ஒதுக்கினேன்.

வழக்கமாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் எனது படிப்பை தொடங்குவேன். ஒரு நாளின் பெரும்பகுதியை தேர்வுக்கு படிப்பதிலேயே செலவிட்டேன்.

நான் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தேன். மேலும் எனது பாடத்தை புரிந்துகொள்வதற்காகவும் தகவல்களை சேகரிப்பதற்காகவும் சாட்-ஜிபிடியை பயன்படுத்தினேன்.

ஒருவர் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால், தொடர்சியான கற்றல் மற்றும் நேர மேலாண்மை மிகவும் முக்கியம். மேலும் நீங்கள் அடைய வேண்டிய இலக்கின் மீது, உங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு தேவை” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *