October 11, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

1 min read

Applications are invited for the post of Technical Assistant in Virudhunagar district.

11.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் (District Climate Change Mission) கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக / மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல் அல்லது தொடர்புடைய இணையான துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,000/- ஊதியத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி அறிவு மற்றும் MS Word, MS Excel, PowerPoint ஆகியவற்றை பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது ஓராண்டு பணியனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தல், தரவு சேகரிப்பு, அறிக்கை தயாரித்தல், களப்பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பை (Resume/CV), கல்வித் தகுதி மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் 20.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எனவே, தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *