வீரவநல்லூர்: முதியவரை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Veeravanallur: Four sentenced to life imprisonment in elderly man’s murder case.
11.10.2026
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே
நிலத்தகராறில் முதியவரை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. மேலும் 4 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள ராஜகுத்தாலபேரியைச் சேர்ந்தவர் பழனிக்குமார் என்ற துரைப்பாண்டி (வயது 60). இவரது குடும்பத்தினருக் கும், அதே பகுதியைச் சேர்த்த உறவினரான சேதுராமலிங்கம் குடும் பத்தினருக்கும் அங்குள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள விவசாய நிலம் தொடர்பாக நீண்டகால மாகப் பிரச்னை இருந்துவந்தது
இந்நிலையில் வேல்சாமியின் மகன் மணிகண்டன் (வயது 37), பழனிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017 செப்.5ம் தேதி நன் ளிரவு 11.45 மணியளவில் பந்தல் மணி கண்மேட்டைச் சேர்ந்த சரித் திரப் பதிவேடு குற்றவாளிகளான உதயகாந்த்(வயது29), வேல்துரை என்ற பார்த்திபன் (வயது 23), அரியநாயகிபுரம் கோபு ஆகிய 3 பேரும் பைக்குகளில் பயங்கர ஆயு தங்களுடன் பழனிக்குமாரின் வீட்டிற்கு வந்தனர். அங்கு தூங்கிக் டிருந்த பழனிக்குமாரை திண்ணைக்கு வெளியே தூக்கிக்கொண்டு வந்து 3 பேரும் வெட்டினர். இதில் பலத்த காயம் டைந்த பழனிக்குமார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத
திலேயே பரிதாபமாக உயி ரிழந்தார் .
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பழனிக்குமாரின் மகன் வேலாயுதம் என்ற மணி (வயது 44) மரு மகள் ஆனந்தவள்ளி (வயது 40) உள்ளிட்ட குடும்பத்தின ருக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்
இதுகுறித்து பழனிக்குமாரின் மகன் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில், வீரவதல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மணிகண்டன், உதயகாந்த் வேல்துரை, கோபு ஆகிய 4 பேரையும் கைது செய்த னர்.இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்னிலையில் வக்கீல் மகேஷ் வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், உதயகாந்த், வேல்துரை என்ற பார்த்திபன். கோபு ஆகிய 4 பேருக்கும் கொலைக் குற்றத்திற்கான ஐபிசி 302 சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 10 ஆயிரம் அப ராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அத்துமீறி வீடு புகுந்த குற்றத்திற்கான
ஐபிசி 449 பிரிவில் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், தலாரூ.10 ஆயிரம் அபராதமும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஐபிசி 506(2) பிரிவில்7 ஆண்டுகள் கடுங் காவல் சிறையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 4 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித் தார்.. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.அதனைத் தொடர்ந்து 4 பேரும் பலத்த போலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்ட னர்.