October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகாசி கல்லூரி மாணவர்களுக்கான புதிய பேருந்து-கீர்த்தனா தொடங்கி வைத்தார்

1 min read

New bus route for Sivakasi college students inaugurated by Keerthana.

12.10.2026
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை இன்று(12.10.2026) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா , மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில், கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவர்களுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியல் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததாவது:-

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரிக்கு வரும் மாணவ/மாணவிகள் அரசு பேருந்துகளில் சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் உள்ள ரிசர்வ் லயன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ கல்லூரிக்கு நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. ஆகையால், கல்லூரிக்கு சென்று வர ஏதுவாக கல்லூரியிலிருந்து சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவ/மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை ஏற்று கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்லூரி நேரங்களான காலை 08.10 மணிக்கு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கும் மற்றும் மாலை 03.10 மணிக்கு கல்லூரியில் இருந்து புறப்பட்டு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்றடையும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *