முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆந்திரா பயணம்
1 min read
Chief Minister Vijay to visit Andhra Pradesh tomorrow.
12.10.2026
தமிழக முதலமைச்சர் விஜய், அரசு முறைப் பயணமாக நாளை ஆந்திரப் பிரதேசம் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின்போது, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் ஆந்திர பயண திட்டம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
- சென்னையில் இருந்து நாளை மதியம் 2:00 மணிக்கு ஆந்திரா புறப்படுகிறார்
- மாலை 3.30 மணிக்கு கன்னாவரம் விமான நிலையத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் செல்கிறார்
- முதல் நிகழ்வாக மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்
- மாலை 6 மணிக்கு கனதுர்கா கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்கிறார்.
- இரவு 8 மணிக்கு விஜயவாடா உத்சவ் 2.0 கலாச்சார நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.
- இரவே மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.