October 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழத் துவங்கியது

1 min read

Water has started falling at the Old Courtallam Falls.

13.10.2026
குற்றாலத்தில் சீசன் காலம் நிறைவடைந்த நிலையில் மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து நின்றது இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பழைய குற்றாலம் அருவியில் இன்று காலை முதல் தண்ணீர் விழத் துவங்கி உள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் இன்று காலை முதல் தண்ணீர் விழத் துவங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

ஆனால் பழைய குற்றாலம் அருவியில் சீசன் காலத்தில் குற்றாலம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். ஆனால் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழத் துவங்கி சுற்றுலா பயணிகள் குளித்து வரும் நிலையில் நேற்று அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பல பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணிகள் சிலர் ஆண்கள் குளிக்கும் பகுதியில் குடிபோதையில் அருவியில் ஜட்டியுடன் கூச்சல் போட்டபடி குளித்தனர்.
இதனால் அந்த நேரத்தில் பழைய குற்றாலம் அருவிக்கு குடும்பத்தோடு வந்த பலர் அருவியில் குடிபோதையில் அதுவும் ஜட்டியோடு கூச்சலிட்டபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கும்பலை பார்த்து அச்சம் அடைந்ததோடு அருவியில் குளிக்காமலேயே திரும்பிச் சென்றனர்.
எனவே மாவட்ட காவல்துறை உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு பழைய குற்றாலம் அருவிக்கு வழக்கம் போல் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *