October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரிப்பு

1 min read

India’s exports of refined fuel to the US and European countries have increased by 43 percent.

20.10.2026
மேலை நாடுகளுக்கான இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி அதிரடியாக அதிக ரித்துள்ளது. ரஷிய கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட எரிபொ ருட்களை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் செயல் பாடு, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 43 சதவீதம் உயர்ந்துள்ளதாக ‘எரி சக்தி மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம்’ தெரிவித்துள்ளது.
இந்தியா, துருக்கி மற்றும் புருனே ஆகிய நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் இந்த மெகா ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள போதிலும், இதில் இந்தியாவின் பங்கே முதன்மையானதாகவும், மிக முக்கிய காரணியாகவும் விளங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தாலி, ரூமேனியா, ஸ்பெயின் உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.11 ஆயிரம் கோடி (1.2 பில்லியன் டாலர்) மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளை இறக்குமதி செய்துள்ளன.

இந்த மெகா வர்த்தகத்தில் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஐரோப் பிய ஒன்றிய துறைமுகங்களுக்கு சென்ற 7 பெரும் எரிபொருள் சரக்குகளில், 6 சரக்குகள் ஜாம்நகர் ஆலையில் இருந்து சென்றவை ஆகும். அதுமட்டுமின்றி, ஜாம்நகரில் இருந்து அமெரிக்காவுக்கு மட்டும் தனியாக ரூ.1,159 கோடி (122 மில்லியன் யூரோ) மதிப்பிலான எரிபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை மலிவு விலைக்கு வாங்கி, சுத்திகரித்து அவற்றை மேலை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து ஏற்று மதி செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில், உலகளவில் ரஷிய கச்சா எண்ணெயை வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது மிகப்பெ ரிய வாடிக்கையாளராக நீடிக்கிறது. செப்டம்பரில் மட்டும் மொத்தம் ரூ.43 ஆயி ரத்து 751 கோடி (4.1 பில்லியன் யூரோ) மதிப்பிலான கச்சா எண்ணெயை ரஷி யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செப்டம்பரில் 13 சதவீதம் சரிவைச் சந்தித்த போதிலும், ஜாம்நகர் மற்றும் பாரதீப் ஆகிய நிலை யங்களை விட வதினார் சுத்திகரிப்பு நிலையம் நாட்டிலேயே மிகப்பெரிய ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா சர்வதேச அளவில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷியா மீதான முட்டுக்கட்டையை, இந்தியா தனது அசாத்திய சுத்திகரிப்புத் திறன் மூலம் ஒரு பெரும் வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *