October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டர் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

1 min read

Tender for new smart meter project deferred by 2 months: Minister Nirmal Kumar announces

19.10.2026
அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:
பருவமழை காலத்தில் நிலைமையை எப்படி கையாள்வது என்பது குறித்து, மின் வாரியம் சார்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் பழைய மின் மாற்றிகளை மாற்றுவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
கிண்டியில் 400 கே.வி., துணை மின் நிலையம் ஒரு வாரத்திற்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், கிண்டி சுற்றுவட்டர பகுதிகளில் உள்ள மின் தட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 5,000 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. கடந்த 15 நாட்களில் மட்டும் 2,600 பேர் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டு பணிகளில் சேர்ந்து உள்ளனர்.
புதிய ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்து உள்ளோம். அதில் புதிதாக ஒரு சில விதிமுறகைளை சேர்ப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் கோர திட்டமிட்டு உள்ளோம். ஒரு வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *