October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இரவணசமுத்திரமத்தில் ஜனநாயக கட்சி போராட்டம் அறிவிப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

1 min read

Democratic Party announces protest in Ravanasamudram; officials initiate talks

21/10/2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரத்தில் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்தது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஹயாத் அன்சார் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அறிவித்தனர்

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்,
சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர்,
வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில்
பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட செயலாளர்,
ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புகாரி மீரா சாகிப் மற்றும் உசேன்,முஸ்லிம் பெண்கள் உதவி சங்க செயலாளர் சலீம். உயிரிழந்த குழந்தை குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதத்திற்குள் ஆற்றை சுத்தம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு அரசு அதிகாரிகள் கோரிக்கை அனுப்பி வைப்பதாகவும் கூறினர்.

இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட பொருளாளர் கலிலூர் ரகுமான், கடையம் ஒன்றிய செயலாளர் முகமது இப்ராகிம், ஆழ்வை ரகுமான், மேட்டூர் சிராஜூதீன். அம்பை ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், மாநில நிர்வாகி சிலம்பாட்டம் சாகுல், நெல்லை அஜுஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *