தென்காசியில் இடதுசாரி விவசாயிகள் மறியல் போராட்டம்.
1 min read
Left-wing farmers stage a protest (road blockade) in Tenkasi
21.10.2026
தென்காசியில் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் இணைந்து நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு இடதுசாரி விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் டி.கணபதி,
திருமலைக் குமாரசாமி, எம்.ராமர்பாண்டியன், எஸ்.சரவண விநாயகம், லெட்சுமணன், சுந்தர் ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது
இந்த போராட்டத்தில் கண்டன உரை சிபிஐ எம்எல்
மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன், சிபிஐமாவட்ட செயலாளர் இசக்கிதுரை இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் ஏஐகேஎம், ஏஐகேஎஸ், தவிச சார்பாக
மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று 88 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்
அகில இந்திய விவசாய சங்க மகா சபா ஏஐகேஎம்
சார்பாக பரமசிவன், அந்தோணியம்மாள்,
சொர்ணம்,வெள்ளத்தாய், வேலு,பாலசுப்ரமணியன்,
ஜெயபால்,அண்ணாத்துரை, கமலவல்லி,நெப்போலியன்,
செல்லத்துரை, உட்பட 45 தோழர்கள் பங்கேற்று
23 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கோரிக்கைகள் சம்பந்தமாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதையும் த வெ க அரசு தேர்தல் வாக்குறுதிபடி தள்ளுபடி செய்து…
. சாகுபடி நடந்து வரும் நிலையில் நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக புதிய கடன் வழங்க வலியுறுத்தியும்.
மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும். வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வலியுறுத்தியும்.
அனைத்து பகுதி மக்களையும் குறிப்பாக விவசாயிகள் பயன் படுத்தி வரும் மின்சாரத்தை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும். டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீரை பெற்றுத் தருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியும். எல் நினோ பாதிப்பால் ஏற்படுகிற வறட்சி மற்றும் மழை வெள்ளம் பாதிப்பிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும்.
வனவிலங்குகளிடமிருந்து விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வனவிலங்கு பட்டியலிருந்து பன்றியை நீக்க வலியுறுத்தியும். விவசாயம். நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை கேள்விக்குல்லாக்கும் கல்குவாரி அனுமதிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும்.
தொழில் வளர்ச்சி நகர்ப்புறம் என்ற பெயரில் விவசாய நிலங்களை பாழாக்காக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தியும். கோஷமிட்டனர்.