செங்கோட்டையில் அறக்கட்டளை சார்பில் தீபாவளி புத்தாடைகள்
1 min read
Diwali new clothes provided by a charitable trust in Sengottai
21/10/2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை குற்றாலம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தாயின்மடியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் 7வது ஆண்டு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று காலம் துவங்கியதிலிருந்து ஆதவரவற்ற முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அன்னசேவை வழங்கியும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலங்களில் அவர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கியும் சேவையாற்றி வரும் தாயின்மடியில் சமூக நல அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த புத்தாடை வழங்கல் நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் ராணி ராம்மோகன் தலைமைதாங்கினார்.
பிஎல்எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி பிரபாமுரளி முன்னிலை வகித்தார். சக்திவேல் டியூசன் சென்டர் இராஜகுமாரி சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பணிநிறைவு பெற்ற வேளாண் அலுவலா் சேக்மைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனைதொடா்ந்து திருக்குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம ஸ்தாபகர் அகிலானந்த மகராஜ் ஆசியுரை வழங்கி பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி துவக்கி வைத்தார். பின்னா் நிகழ்ச்சியில் பசிபோக்கும் தளம் தென்பொதிகை டிரஸ்ட் சார்பில் 500வது அன்னசேவையை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட முதியோர்களை கொண்டு 10 கிலோ அளவிலான பட்டர்கேக்கை முதியோர் களின் கரங்களால் வெட்டி ஊட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐந்தருவி சாரதா ஆசிரம நிர்வாகி யதிஸ்வரிஆத்மபிரியா அம்பாள், ராம்மோகன், மருதுபாண்டியன், பெரியபிள்ளைவலசை ஊராட்சிமன்றத்தலைவா் பொறியாளர் க.இ.வேல்சாமி, மாரியப்பன், கற்குடி பஞ்சாயத்து தலைவா் முத்துப்பாண்டி, டாக்டர் ரத்னபெத்முருகன், டாக்டர் சுகன்யா, அனிதாஆனந்த், அமுதா, வெங்கட்ராமன், நேயன், ஹரிஐயா், செம்மை அறக்கட்டளை நிர்வாகி சித்ரா,ஆகியோர் வாழ்த்துறை வழங்கினா். ஆவுடையப்பன், மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் கலந்து கொண்ட சுமார் 350 பேருக்கு பசிபோக்கும் தளம் தென்பொதிகை டிரஸ்ட் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பபட்டது. முடிவில் வழக்கறிஞா் சதீஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.