கேரளத்தின் 29-வது கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு
1 min read
Om Prakash Mathur takes office as the 29th Governor of Kerala
23.10.2026
தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டு, கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். மேலும் கேரளத்தின் புதிய கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் 29-வது கவர்னராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில் கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள பேடல் கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூர், குஜராத் மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.