‘திருக்குறள் பயில்வோம்’– காசி தமிழ் சங்கமம் நவ. 28ல் தொடக்கம்
1 min read
‘Let’s Study the Thirukkural’ — Kashi Tamil Sangamam to begin on Nov. 28
22/10/2026
‘திருக்குறள் பயில்வோம்’ என்ற கருப்பொருளுடன் ஐந்தாவது காசி தமிழ் சங்கமம், நவ., 28ல் தொடங்குகிறது.
தமிழகத்திற்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கும் இடையேயான ஆழமான நாகரிக பிணைப்புகளை கொண்டாடும் வகையிலும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், மத்திய கல்வித் துறை சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருள்களில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, ‘தமிழ் கற்கலாம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சி வரும் நவ., 28ம் தேதி தொடங்கி, டிச., 12 வரை நடக்கிறது.
இந்த ஆண்டு, ‘திருக்குறள் பயில்வோம்’ என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருக்குறளை நாடு முழுதும் உள்ள மாணவர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன், இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்கள், ஆன்மிகம் ஆகிய ஏழு பிரிவுகளில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. https://kashitamil.iitm.ac.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம். ஒவ்வொரு பிரிவிலும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோர், திருக்குறள் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.