October 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தொடர்ந்து 2 காலாண்டுகளாக இந்திய தபால்துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்

1 min read

India Post records Rs 4,000 crore in revenue for two consecutive quarters

24.10.2026
இந்திய தபால்துறையின் 2-ம் காலாண்டுக்கான (ஜூலை-செப்டம்பர்) ஆய்வுக்கூட்டம் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இணை மந்திரி சந்திரசேகர் பெம்மசானி, துறை செயலாளர் சுப்ரத் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2-ம் காலாண்டுக்கான துறையின் முன்னேற்றங்கள் பற்றி அதிகாரிகள் எடுத்துரைத்தனர். 2-ம் காலாண்டில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 201.5 கோடி வருவாயை தபால்துறை ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வளர்ச்சி ஆகும். முதல் காலாண்டை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். முதல் காலாண்டிலும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தபால்துறையில் உள்ள 6 வணிகப்பிரிவுகளும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தனிநபர் காப்பீட்டுத்திட்டம் 44 சதவீதமும், தபால்கள் பிரிவு 36 சதவீதமும், அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி 18 சதவீதமும், பார்சல்கள் 71 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *