October 24, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜியோ பொதுப் பங்கு 1.39 கோடி விண்ணப்பங்களை குவித்து உலக சாதனை

1 min read

Jio IPO sets a world record by garnering 1.39 crore applications

24.10.2026
ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் ஆரம்பநிலை பொதுப் பங்குகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோடியை கடந்து உலக சாதனை படைத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைக்கான துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ், பங்குச்சந்தை மூலம் ரூ.30 ஆயிரத்து 213 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

அதற்காக ஆரம்பநிலை பொதுப்பங்குகள் (ஐ.பி.ஓ.) வெளியிடுவதாக அறிவித்தது. ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பங்குகளுக்கு முன்பதிவு செய்வது கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

19 கோடியே 75 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. முன்பதிவு தொடங்கிய 100 நிமிடங்களிலேயே அதையும் தாண்டி, 20 கோடியே 25 லட்சம் பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அதாவது, 100 நிமிடங்களிலேயே 100 சதவீத சந்தாதாரர்கள் கிடைத்து விட்டனர்.

2-வது நாளான நேற்று முன்தினமும் கோடிக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்ய நேற்று கடைசிநாள் ஆகும். நேற்றும் விண்ணப்பங்கள் குவிந்தன. நேற்று பகல் 12.03 மணிக்கு மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இதன்மூலம் ஆரம்பநிலை பொதுப்பங்குகளுக்கு 1.39 கோடி விண்ணப்பங்களை பெற்ற உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஜியோ பிளாட்பார்ம்ஸ் பெற்றது. முன்பதிவு முடிவதற்கு 5 மணி நேரங்கள் இருக்கும்போதே இந்த சாதனை படைக்கப்பட்டது.

இதற்கு முன்பு, ஆரம்பநிலை பொதுப்பங்குகளுக்கு 97 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததுதான் உலக சாதனையாக இருந்தது. வாரீ எனர்ஜிஸ் என்ற நிறுவனம், அந்த சாதனையை படைத்திருந்தது. அதை ஜியோ பிளாட்பார்ம்ஸ் முறியடித்துள்ளது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் ஆனந்த் பிறந்தநாளில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆரம்பநிலை பொதுப்பங்குதான், இந்திய அளவில் அதிக விண்ணப்பங்களை பெற்றதாக உள்ளது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் 19 கோடியே 75 லட்சம் பங்குகளை விற்பனை வைத்துள்ள போதிலும், 136 கோடியே 32 லட்சம் பங்குகளை கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது. இருப்பதை விட ஏறத்தாழ 7 மடங்கு அதிகமான பங்குகள் கோரப்பட்டுள்ளன. இது. அந்நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கென 8 கோடியே 50 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 17 கோடியே 19 லட்சம் பங்குகளை கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல், நிறுவனங்கள், உள்நாட்டு நிதிநிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், பங்குதாரர்கள். ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் ஒதுக்கப்பட்டதை விட அதிகமான பங்குகள் கோரியுள்ளனர்.

யார், யாருக்கு எவ்வளவு பங்குகள் என்று 26-ந்தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பங்குகள். பங்குச்சந்தைகளில் 28-ந்தேதி பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *