October 27, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: வளர்ப்பு மகனால் தனக்கும் கணவருக்கும் ஆபத்து என பெண் புகார்

1 min read

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 90; hdrForward: 5; shaking: 0.000990; highlight: 1; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0017,0.0000; brp_del_sen: 0.1300,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:26 11:27:51; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 150.74341;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65537;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 36;zeissColor: bright;

Nellai: Woman complains that she and her husband are in danger from their adopted son

26.10.2026
தனது வளர்ப்பு மகனால் தனக்கும், தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென தலையில் கட்டுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில். விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி மேலத்தெருவை சேர்ந்த செல்வஅரசன் என்பவரது மனைவி ஜெயலெட்சுமி (வயது 48) என்பவர் தலையில் கட்டுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், எனது கணவரும் கோட்டைவிளைபட்டியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வளர்ப்பு மகன் ஒருவரும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. நாங்கள் வசிக்கும் வீடு நான் கிரையம் வாங்கி எனது பெயரில் உள்ள வீடு ஆகும். எங்கள் வீட்டின் கீழ் பகுதியில் நாங்களும், மேல் மாடியில் எனது வளர்ப்பு மகனும் வசித்து வருகின்றனர். எனது மகன் திருமணம் முடிந்த பிறகு மனைவியின் பேச்சை கேட்டு எங்கள் சொத்துக்களான வீடு, காலிமனை, வயல் உள்ளிட்ட சொத்துக்களை அவரது பெயருக்கு மாற்றி தர கேட்டு என்னிடமும், எனது கணவரிடம் தொடர்ந்து தகராறு செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ந்தேதி இரவு எனது வளர்ப்பு மகன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து எங்களை கம்பால் தாக்கி, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தடுக்க வந்த உறவுக்கார பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த நானும், எனது உறவுக்கார பெண்ணும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம்.

இதனிடையே எங்களை தாக்கியவர்கள் மீது வி.கே.புரம் போலீசில் புகார் தெரிவித்தும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் எங்களது வீட்டின் மாடியில் சந்தேகப்படும் நபர்கள் 4 பேர் தங்கியுள்ளனர். இதனால் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே எங்களை தாக்கிய எங்கள் மகன் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் வீட்டில் தங்கியிருக்கும் சந்தேக நபர்களை அங்கிருந்து வெளியேற்றிடவும், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *