October 27, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பகத்தில் மாணவ, மாணவகளுக்கு பரிசளிப்பு விழா

1 min read


Prize-giving ceremony for students at the Muthumaalaipuram evening study center

26.10.2026
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு ஆதிநாராயணனின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 25.10.2026 அன்று கட்டணமில்லா படிப்பகத்திற்கு விடுமுறை எடுக்காமல் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கல்வியாளர் ராஜன், திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன், சின்னத்திரை நடிகை ஜெயந்தி, சிலம்ப கலைக்கூட தலைவர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *