திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது
1 min read
Former DMK Minister Anbil Mahesh arrested
26.10.2026
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், அந்தத் தொகை யாரை சென்றடைந்தது என்பதை அன்பில் மகேஷை விசாரிக்காமல் கண்டறிய முடியாது.
விசாரணைக்கு ஒத்துழைத்ததால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ் உரிமை கோர முடியாது. அன்பில் மகேஷ் சாதாரண நபர் அல்ல. அரசியல் செல்வாக்கு மிக்கவர். புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாலும் முன் ஜாமின் வழங்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியது.
இந்தநிலையில்,திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்து அவரை சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஷ்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சிரித்துக்கொண்டே காரில் ஏறி கமிஷனர் அலுவலகம் சென்றார். 2021 -26 வரை திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அன்பில் மகேஷ் கைது. விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை அழைத்து செல்லப்பட்டார்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை நிறைவடைந்ததை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில் மகேஸ் அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை அழைத்து செல்லப்பட்டார்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை நிறைவடைந்ததை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில் மகேஸ் அழைத்துச் செல்லப்பட்டார்.