October 30, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி.யாக டாக்டர் ஆர்.ஸ்டாலின் நியமனம்

1 min read

Dr. R. Stalin appointed as the new SP of Tenkasi district

29.10.2026
தென்காசி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர் ஆர் ஸ்டாலின் ஐபிஎஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில் இன்று தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தமிழக கேரளா எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கனிமவள கொள்ளைகளுக்கு எதிராக திறம்பட செயலாற்றியவர்.

மேலும் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர். என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிமிர் என்ற ஒரு புதிய அமைப்பை காவல்துறையிடம் உருவாக்கி அதன் மூலம் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தல், ஆதரவின்றி பேருந்து நிலையம் கோவில் போன்ற பொது இடங்களில் இருந்து வந்த மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து பொது மக்களிடையே மிகுந்த நன்மதிப்பை பெற்றவர் டாக்டர் ஆர் ஸ்டாலின் ஐபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது,
தமிழ்நாட்டில் காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் அ.கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற நிலையில் சிறைத்துறை தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர், சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறையின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும், சஞ்சய் மாதுர் மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் டி.ஜி.பி-யாகவும், சோனல் சந்திரா சென்னை டி.ஜி.பி அலுவலக தலைமையக ஐ.ஜி-யாகவும், பி. ரகுபதி கரூர் மாவட்டக் காவல் கண்காணிப் பாளராகவும் (SP), டாக்டர் ஆர். ஸ்டாலின் இ.கா.ப தென்காசி மாவட்ட எஸ்.பி-யாகவும், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ். அசோக் குமார் மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டு. புதிய பணியிட மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பணி ஏற்க உள்ள டாக்டர் ஆர் ஸ்டாலின் ஐபிஎஸ் வருகையால் தென்காசி மாவட்டம் இனி பரபரப்பாக இயங்கும் குமரி மாவட்டத்தை போன்றே தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை பகுதியில் இனி கனிமவள கடத்தல் என்பதுகட்டுக்குள் கொண்டு வரப்படும். மேலும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். மேலும் தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மது விற்பனை போன்றவை இனிஅடியோடு நிறுத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *