தென்காசி முதல் பெண் ஆட்சியராக மோனிகா ரானா பதவியேற்பு
1 min read
Monica Rana takes charge as the first female District Collector of Tenkasi
29.10.2026
தென்காசி மாவட்டத்தின் 8-வது ஆட்சியராகவும், முதல் பெண் ஆட்சியராகவும் மோனிகா ரானா இன்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் கடந்த 2019-ஆம் வருடம் பிரிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல் 7 ஆட்சியர்கள் இதுவரை பணிபுரிந்த நிலையில்
8-வது ஆட்சியராக மோனிகா ராணா இன்று பதவியேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் புதிய மாவட்ட ஆட்சியர் மோனிகா ரானா பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள நிலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தென்காசி மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கிய தமிழகத்தின் முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசின் நல்ல பல திட்டங்களை சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக அடித்தட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது நோக்கமாகும். அதற்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.