தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவிற்கு இரட்டை ஆயள் தண்டனை
1 min read
Tenkasi: Double life sentence for uncle who sexually molested a minor girl
29.10.2026
தென்காசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தென்காசி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார்.
தென்காசி அருகே உள்ள வடகரை வாவாநகரம் பகுதியை சேர்ந்தவர் கணபதிஆசாரி இவரது மகன் குமாரவேல் (வயது 47). இவர் அப்பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் காலமாகிவிட்டனர். குமாரவேல் அச்சிறுமிக்கு சித்தப்பா முறை ஆவார். குமாரவேல் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது குறித்து கடந்த 30.07.2024ம் தேதி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மனோஜ்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது சித்தப்பா குமாரவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சேவியர் பாண்டியன் ஆஜரானார்.