October 29, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் வக்கீல் பணிக்கு திரும்பிய முன்னாள் கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை

1 min read

Former Governor Sreedharan Pillai returns to legal practice in Kerala

29.10.2026
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் பிள்ளை. வக்கீலான இவர், பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர். அவர், கோவா மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கவர்னராக பணி யாற்றினார். பின்னர் அவருக்கு பதவி காலம் முடிந்தது.

இந்தநிலையில் முன்னாள் கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் பதவி முடிந்ததை அடுத்து, தற்போது மீண்டும் வக்கீல் பணிக்கு திரும்பி உள்ளேன். இது வழக்கத்திற்கு மாறான செயல். ஓய்வு பெற்ற கவர்னருக்கு ஓய்வூதியமோ அல்லது பிற சலுகைகளோ கிடைப்பதில்லை. இதனால் எனது குடும்ப செவுகளை ஈடுகட்ட மீண்டும் பணியாற்ற வேண்டியுள்ளது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 2 கட்சிகளின் தலைவர்களும் என்னை அணுகி, சட்ட உதவிகளை கேட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகி வாதாட போகிறேன். வருகிற நவம்பர் 6-ந் தேதி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வக்கீலாக ஆஜராக உள்ளேன். இதற்காக ஓராண்டு காலம் திட்டமிட்டே ஒதுங்கியிருந்தேன். மேலும் பா.ஜனதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து செங்கன்னூரில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *