தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக மோனிகா ரானாநியமனம்.
1 min read
Monica Rana appointed as the new Collector of Tenkasi district.
29/10/2026
தென்காசி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த ரஜ்ஜீத்சிங் நேற்று இரவு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நெல்லை மாநகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த மோனிகா ரானா தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் 2019-இல் மாவட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் (கலெக்டர்கள்) முழுமையான பட்டியல் பின்வருமாறு.
முதல் மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், இரண்டாவது மாவட்ட ஆட்சியராக எஸ். கோபால சுந்தரராஜ், மூன்றாவது மாவட்ட ஆட்சியராக கே.சமீரன், நான்காவது மாவட்ட ஆட்சியராக பி.ஆகாஷ், ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக துரை ரவிச்சந்திரன், ஆறாவது மாவட்ட ஆட்சியராக ஏ.கே.கமல்கிஷோர், ஏழாவது மாவட்ட ஆட்சியராக ரஞ்ஜீத்சிங் பணியாற்றி வந்த நிலையில் நேற்று இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் எட்டாவது மாவட்ட ஆட்சியராக நெல்லை மாநகராட்சியின் ஆணையாளராக பணிபுரிந்த மோனிகா ரானா தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.