October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகரில் கோரிக்கை மனுக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் பரிசீலித்தல் தொடர்பான பயிற்சி

1 min read

Training on the use of artificial intelligence for processing petitions in Virudhunagar

30.10.206
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (30.10.2026) திங்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பரிசீலித்தல் தொடர்பான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பின்னர் அவர்கதெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை விரைவாகவும், திறம்படவும் பரிசீலித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகத்தின் முக்கியப் பணியாகும். இப்பணிகளை மேலும் எளிமைப்படுத்தவும், மனுக்களின் விவரங்களைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து சராசரியாக 500 முதல் 800 வரை கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் மனுக்களின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துதல், தொடர்புடைய துறைகளுக்கு அனுப்புதல், மனுக்களின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்வதை மேம்படுத்துதல் போன்ற பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். மேலும், மனுக்களைப் பரிசீலிக்கும் பணியில் அலுவலர்களின் பணி நேரம் குறைவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தவும், விரைவாக தீர்வு காணவும் முடியும்.

எனவே, இப்பயிற்சியில் பங்கேற்கும் அலுவலர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும், உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் பயன்படுத்தி, பொதுமக்களின் குறைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் மோகனா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *