November 2, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.74,995 நலத்திட்ட உதவிகள்

1 min read

Virudhunagar: Welfare assistance worth Rs. 74,995 provided at the public grievance redressal meeting

2.11.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில் இன்று (02.11.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 74,995 மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன்பேசியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 569 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கிடும் வகையில் சுயதொழில் வழிகாட்டு மையத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சசிகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜான்சன் தேவசகாயம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்ம நாயகம், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *