November 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 4,5-ந் தேதிகளி்ல் வீடு தேடி ரேஷன் பொருள்

1 min read

Ration supplies to be delivered to doorsteps in Tenkasi district on the 4th and 5th

2.11.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ரானா கூறியிருப்பதாவது;-

நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர்-4 (புதன்) மற்றும் 5 (வியாழன்) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு. சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்கள் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *