அரசு மாதிரிப் பள்ளிகள் வெற்றி பள்ளிகள் என பெயர் மாற்றம்
1 min read
Government model schools renamed as ‘success schools’
3.11.2026
தமிழகத்தில் அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர் வெற்றி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் வெளியிட்டு உள்ளார்.
திமுக ஆட்சியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி, உணவு, உறைவிடம் என அனைத்தும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் வகையில் ஆரம்பிக்கப்ட்டது. மாவட்டத்திற்கு ஒன்று என்ற வகையில் 38 மாவட்டங்களிலும் இத்தகைய பள்ளிகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்தன.
அரசு மாதிரிப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், கம்யூட்டர் மற்றும் இண்டர்நெட் வசதி, நவீன ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் என வசதிகள் இந்த பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி. நீட் தேர்வு பயிற்சியும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வகை பள்ளிகளின் பெயர்களை தமிழக அரசு மாற்றி இருக்கிறது. அரசு மாதிரிப் பள்ளிகள் இனி வெற்றிப் பள்ளிகள் என்றே அழைக்கப்படும் என்று தமிழக மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் பல்வேறு திட்டங்களின் பெயர்களில் வெற்றி பெயர் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், லேட்டஸ்டாக மாதிரிப் பள்ளிகள், வெற்றி பள்ளிகளாக மாறி இருக்கின்றன.