விருதுநகர்: போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
1 min read
Virudhunagar: Free training classes for competitive examinations
3/10/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 6,574 காலிப்பணியிடங்கள் TNPSC Group-IV தேர்விற்கான அறிவிக்கை 06.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.11.2026 ஆகும். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
மேலும், இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தும் பிராந்திய கிராமப்புற வங்கி அலுவலர் I, II & III (IBPS REGIONAL RURAL BANK OFFICERS SCALE – I, II, & III) மற்றும் Office Assistant – Multipurpose தேர்விற்கு 13,745 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், தேர்வர்களின் தொடர் பயிற்சிக்கு உதவும் வகையில் போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இலவச Wi-Fi வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் அலுவலகத்தில் உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.
இவ்வாய்ப்பை பயன்படுத்தி, TNPSC Group – IV மற்றும் IBPS Regional Rural Bank தேர்வுக்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.