November 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவபத்மநாதன் இல்ல திருமண விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

1 min read

Wedding ceremony at Sivapadmanathan’s residence – Invitation extended to M.K. Stalin

4.11.2026
தென்காசி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் -ஆசிரியை மணிமேகலை தம்பதியரின் மகள் டாக்டர் சி. பிருந்தா ஸ்ரீக்கும், கீழப்பாவூர் சுடலையாண்டி- செல்லம் தம்பதியரின் மகனும் ஆலங்குளம் அரசு டாக்டருமான சு. அருள்செல்வனுக்கும் வருகிற நவம்பர் 22-ஆம் தேதி ஆலங்குளம் ஏ.ஜே. திருமண மஹாலில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் சென்னையில் தி.மு.க. தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் நேரில் வழங்கி விழாவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி விழாவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *