குற்றாலத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
1 min read
District Collector inspects development works in Courtallam in person
5/11/2026
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான மெயினருவி, புலி அருவி பகுதிகளில் கார்பார்க்கிங் மற்றும் வணிக வளாக கடை பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்ஜீத் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றி வந்த டாக்டர் மோனிகா ரானா நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக அரசு பணி நியமனம் செய்த மறுநாளே தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர் மோனிகா ராணா பதவி ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று குற்றாலம் பேரூராட்சி பகுதிக்கு வருகை தந்தார் . அப்போது குற்றாலம் பேரூராட்சியின் செயல்
அலுவலர் ஜா. மாணிக்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவரை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குற்றாலம்
பேரூராட்சி மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் பற்றி செயல் அலுவலர் ஜா. மாணிக்க ராஜிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் வணிக வளாக கடைகள், கார் பார்க்கிங், உள்ளிட்ட இடங்களையும், மேலும் புலி அருவி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா:ரானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குற்றாலம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், மற்றும் பேரூராட்சி பொறியாளர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.