கனிமவள கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்- தென்காசி எஸ்பி எச்சரிக்கை
1 min read
Those involved in the smuggling of mineral resources will face the Goondas Act – Tenkasi SP’s warning
5.11.2026
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒழுங்கைப் காக்கவும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு – நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படும். என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனிமவள கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளார்.
மேலும் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்ட றிந்து, அப்பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை , எடுக்கப்படும் என்றும், தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கத் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சாலை விபத்துகளைக் குறைக்ககவும், போக்குவரத்து நெரி சல்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் , மேற்கொள்ளப் படும். தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களற்ற அமைதியான சூழலை உருவாக்கவும், காவல் துறை தொடர்ந்து தீவிரமாகச் செயல் படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.