இலங்கை அரசு விடுவித்த 8 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
1 min read
8 fishermen released by the Sri Lankan government have returned to Tamil Nadu
6.11.2026
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள், கடந்த, அக்., 3ம் தேதி, கடலில் மீன் பிடிக்க விசைப்படகில் சென்றனர்.
அவர்கள், நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தது. அவர்களின் விசைப்படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
பின், அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.
இதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டு, நேற்று (நவ.,5) இரவு விமானத்தில் சென்னை வந்தனர். பின், அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றனர்.