November 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அன்பில் மகேஷ் காவல் நீட்டிப்பு

1 min read

Anbil Mahesh’s police custody extended

6.11.2026
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, திமு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு, வரும் 18ம் தேதி வரை, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி, 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், 48, கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூன்று நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து, மீண்டும் அதே சிறையில் அடைத்துள்ளனர். அவரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம், அன்பில் மகேஷுக்கு, வரும், 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *