November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக இழப்பீட்டுத் தொகைக்கான முகாம்

1 min read

Compensation disbursement camp for National Highway project in Tenkasi

7.11.2026
தென்காசி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 744 அமைக்கும் பணிக்காக இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு நில ஆவணங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது -மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.

இராஜபாளையம் செங்கோட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில ஆவணங்களை கையகப்படுத்தப்பட்ட உடைமைதாரர்களிடமிருந்து நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் பின்வருமாறு நடத்தப்படுகிறது.

சிவகிரி வட்டம், 13.11.2026 வெள்ளி கிழமை சிவகிரி பாகம்-1 கிராமம், 17.11.2026 செவ்வாய் கிழமை திருமலாபுரம் கிராமம், 20.11.2026 வெள்ளி கிழமை இராயகிரி பாகம்-2 கிராமம், 24.11.2026 செவ்வாய் கிழமை 6. செவ்வாய் கிழமை நாரணபுரம் வியாழக் கிழமை வாசுதேவநல்லூர் கிராமம், 01.12.2026 செவ்வாய் கிழமை சுப்பிரமணியபுரம் கிராமம்.

தேசிய நெடுஞ்சாலை 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நில உடைமைதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *